உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழைக்காக அம்மனுக்கு கருவேப்பிலை பந்தல்!

மழைக்காக அம்மனுக்கு கருவேப்பிலை பந்தல்!

திருப்பூர் : திருப்பூர் நெசவாளர் காலனி அடுத்த, திருமலை நகர் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா, 16ல் துவங்கியது. நேற்று முன்தினம் மாவிளக்கு ஊர்வலம், நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. மதியம், 12:00 மணிக்கு, உற்சவ மகாபூஜை, தீர்த்த கலச ஊர்வலம், உற்சவர் வீதி உலா நடைபெற்றது. கோடை வெப்பத்தை தணித்து, பூமிக்கு தாகசாந்தி அளிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடு, கோவில் முழுவதும் கருவேப்பிலை பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. கருவேப்பிலையால் வேயப்பட்ட குடிசைக்குள், சந்தனக்காப்பு அலங்காரத்தில் இருந்த அம்மனுக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !