உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தைலாபுரம் கோவிலில் கூத்தாண்டவர் தேரோட்டம்

தைலாபுரம் கோவிலில் கூத்தாண்டவர் தேரோட்டம்

வானுார்: வானுார் அருகே தைலாபுரம் கோவிலில் தீ மிதி விழா நடந்தது. வானுார் அடுத்த தைலாபுரம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன், கூத்தாண்டவர் சுவாமி கோவில் திருவிழா நடந்தது.  கடந்த 5ம் தேதி கூத்தாண்டவருக்கு துவஜாரோகணமும்,  8ம் தேதி திரவுபதியம்மனுக்கு துவஜாரோகணம் சுவாமி வீதியுலா நடந்தது.  தொடர்ந்து 9ம் தேதி கிருஷ்ணன் லீலையும்,  10ம் தேதி இந்திரவிமானத்தில் வீதியுலாவும் நடந்தது. 11ம் தேதி அம்மனுக்கு பின்னமர சேவையும், 12ம் தேதி பஞ்சபாண்டவர் ரத சாரதியில் வீதிஉலா நடந்தது.  தொடர்ந்து 13ம் தேதி அர்ச்சுணன் ஜலகிரீட புஷ்ப பல்லக்கிலும், 14ம் தேதி முதல் நாள் பக்காசூரனுக்கு சோறு போடுதல், 15ம் அம்மனுக்கு திருக்கல்யாணமும், 16ம் தேதி கரக உற்சவம், 17ம் தேதி தபசு உற்சவம், அரவான் கடபலி நடந்தது. நேற்று (21ம் தேதி) கூத்தாண்டவர்  தேர் உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !