திந்திரிணீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்!
ADDED :3504 days ago
திண்டிவனம்: திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. காலை ௯.௧௫ மணியளவில் துவங்கிய தேரோட்டத்தை, முன்னாள் அமைச்சர் சண்முகம், வடம் பிடித்து துவக்கி வைத்தார். நகர்மன்ற சேர்மன் வெங்கடேசன், அ.தி.மு.க., நகர செயலாளர் தீனதயாளன் , நகர கூட்டுறவு வங்கி தலைவர் சேகர், மாவட்ட பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், ஜின்ராஜ், வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், கவுன்சிலர்கள் சுதாகர், பொன்மலர் நட்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.