உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிபுரீஸ்வரர் கோவிலில் இலவச தமிழ் வகுப்புகள்

ஆதிபுரீஸ்வரர் கோவிலில் இலவச தமிழ் வகுப்புகள்

பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை, ஆதிபுரீஸ்வரர் கோவிலில், வரும், 25ம் தேதி முதல், கோடை கால இலவச தமிழ் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. பெருங்குடி மண்டலம், பள்ளிக்கரணையில், வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில், வரும், 25ம் தேதி முதல், காலை, 9:00 முதல் முற்பகல், 11:00 மணி வரை, இலவசமாக தமிழ் வகுப்புகள், 40 நாட்கள் நடத்தப்படும். இந்த வகுப்புகளில் பன்னிரு திருமுறைகள், திருக்குறள் உள்ளிட்ட ஆன்மிக கருத்துக்கள் இடம் பெறும். அனைவரும் கலந்து கொள்ளலாம் என, அறநிலைய துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !