உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலுார் மாகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

சூலுார் மாகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

சூலுார் : காட்டூர் மாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா வரும், மே 4ம்தேதி நடக்கிறது. சூலுார் கலங்கல் ரோட்டில் உள்ள காட்டூர் மாகாளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு சித்திரை திருவிழா கடந்த, 19ம்தேதி இரவு சாட்டு பூஜையுடன் துவங்கியது. வரும், 26ம்தேதி இரவு,10:00 மணிக்கு அக்னி கம்பம் நடப்படுகிறது. திருவிளக்கு பூஜை வரும், மே 1ம்தேதி மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. நொய்யல் ஆற்றில் இருந்து தீர்த்தக்குடங்களுடன் அம்மை அழைத்தல், 4ம்தேதி காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடக்கிறது. மாலை,4:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவமும், மாவிளக்கு எடுத்தலும் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு அன்னதானமும், மாலையில் இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !