உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மமுனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

தர்மமுனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

கீழக்கரை:கீழக்கரை அருகே முனீஸ்வரம் தர்ம முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.முனீஸ்வர், பரிவார தெய்வங்களான கருப்பணசுவாமி, காளியம்மன், முண்டன்சாமி மூலஸ்தான கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடந்தது. கணபதி ஹோமம், அனுக்ஞை, பூர்ணாகுதி, யாத்ரா தானம், கோபூஜை, சுமங்கலி பூஜை, சூர்ய பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேகத்திற்கு பின் மூலவர்களுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனை, சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !