திருபுவனை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED :3504 days ago
திருபுவனை: மதகடிப்பட்டுப்பாளையம் துலுக்கான மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நேற்று நடந்தது. திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் இரவு 8.30 மணிக்கு சாமி வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான தேர் திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை 10.30 மணிக்கு துலுக்கான மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். 11.30 மணிக்கு திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு தனி அதிகாரி சக்கரவர்த்தி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.