உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூமேட்டு உச்சிமாகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா

பூமேட்டு உச்சிமாகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா

சோழவந்தான்: சோழவந்தான் பூமேட்டு உச்சிமாகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் புனிததீர்த்தக்குடம் சுமந்து பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இத்திருவிழா 12 நாட்கள் நடக்கின்றன. நேற்று காலை பக்தர்கள் வைகை ஆற்றில் மஞ்சள் நீராடி புனிதநீர் குடங்களில் நிரப்பி ஊர்வலமாக கோயில் வந்தனர். அங்கு அம்மனுக்கு வழிபாடு, பூச்சொரிதல், பொங்கல் படைத்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !