உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் அபயபிரதான ரெங்கநாத கோவில் தேரோட்டம்

கரூர் அபயபிரதான ரெங்கநாத கோவில் தேரோட்டம்

கரூர்: கரூர் அபயபிரதான ரெங்கநாத கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடந்தது. விழாவில் தினமும் வாகன உற்சவங்கள் நடந்தது. கடந்த, 19ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று காலை, 8.30 மணிக்கு நடந்தது. அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடந்த பிறகு, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் மேட்டுத்தெரு, தேர்வீதி, ராஜவீதி தெரு, ஜவஹர் பஜார் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இந்து சமய அறநிலைத்துறையினர் போதிய ஏற்பாடுகள் செய்யாததால், தேர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: குண்டும், குழியுமான சாலையில், தேர் நகர்ந்து செல்லும் போது, சாய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் பக்தர்கள் பின்தொடர்ந்து வந்தனர். தேர் செல்லும் சாலையில் குறைந்தபட்சம் பேட்ஜ் ஒர்க் செய்திருக்க வேண்டும். தேர் செல்லும்போதுதான், அந்த வழியில் தாழ்வாக இருந்த மின்சார ஒயர்களை அகற்றும் பணிகளை, மின்வாரிய ஊழியர்கள் அவசர, அவசரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும், கேபிள் டிவி ஒயர்கள் சாலை குறுக்கில் சென்றதால், பல இடங்களில் தேர் ஓட்டம் தடைபட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !