உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுடேஸ்வரி அம்மன் திருக்கல்யாண உற்சவம்

சவுடேஸ்வரி அம்மன் திருக்கல்யாண உற்சவம்

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கல்யாண உற்சவம் இரண்டு கோவில்களில் நேற்று நடந்தது. குமாரபாளையத்தில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு புதுப்பேட்டை மற்றும் சேலம் பிரதான சாலை ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்களில், சிவபெருமானுடன் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காலை, 7.30 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பும், 11 மணியளவில் திருக்கல்யாண உற்சவமும், மாலை, 6 மணிக்கு தம்பதி சமேதராக திருவீதி உலாவும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !