அம்மன் திருமணத்தில் வீரக்குமாரர்கள் நடனம்
ADDED :3504 days ago
நாமகிரிப்பேட்டை: சீராப்பள்ளி, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருமண உற்சவத்தில் வீரக்குமாரர்கள் கத்தி போட்டு நடனமாடினர். ராசிபுரம் அடுத்த, சீராப்பள்ளியில் பிரசித்தி பெற்ற ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள ராமலிங்கேஸ்வரருக்கும், சவுடேஸ்வரி அம்மனுக்கும் நேற்று திருமணம் நடந்தது. தொடர்ந்து, பகுதிவாசிகளுக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது. மாலை ராமலிங்கேஸ்வரர் மற்றும் சவுடேஸ்வரி அம்மன் ஊர்வலம் நடந்தது. இதில், சீராப்பள்ளி வீரக்குமாரர்கள் கத்தி போட்டு நடனமாடி சென்றனர்.