கண்ணகி கோயில் தீர்த்த கலசம்
ADDED :3504 days ago
தாண்டிக்குடி:தாண்டிக்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்கு பக்தர்கள் தீர்த்த குடம் மற்றும் காவடி எடுத்து சென்றனர். கடந்த சில ஆண்டுகளாக தேனி மாவட்டம் பளியன்குடி கண்ணகி கோயிலுக்கு தாண்டிக்குடி பாலமுருகன், கதவுமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்ட தீர்த்தங்கள் அடங்கிய கலசங்கள், காவடி எடுத்து பக்தர்கள் செல்வது வழக்கம். சித்திரை மாத பவுர்ணமி நாளில் நடக்கும் விழாவில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் தீர்த்த கலசம் எடுத்து சென்றனர்.