உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

பழநி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

பழநி:பழநி லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில், சித்திரை திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. பழநி லட்சுமி நாராயணபெருமாள் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆதாரனையும், உற்சவருக்கு புண்ணிய வாஜனம், தீர்த்தம் தெளித்தல், யாத்ராயானம், காலை 5.45 மணிக்கு லட்சுமி நாராயணப்பெருமாள் தேர் ஏற்றம் செய்யப்பட்டது. காலை 7.15 மணிக்கு மேல், கோயில் முன் இருந்து தேர் வடம்பிடித்தல் ஆரம்பம் ஆகி, நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது. இரவு 7 மணிக்கு மேல் தங்கக் குதிரை வாகனத்தில் பெருமாள் பக்தர்களுக்கு எழுந்தருளினார். ஏப்.22 (இன்று) இரவு 7 மணிக்கு மேல் சப்பரத்தில் பெருமாள் திருவுலா வருதல் நடக்கிறது. நள்ளிரவு கொடியிறக்குடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணைஆணையர்(பொ) மேனகா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !