புதுமாரியம்மன் கோயில் உற்சவம்
ADDED :3504 days ago
மதுரை:மதுரை மாவட்டம் சேடபட்டி அருகே அத்திபட்டி புதுமாரியம்மன் கோயில் உற்சவ விழா ஏப்.,29 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.அன்றிரவு ஸ்ரீவள்ளி திருமணம் நாடகம், ஏப்.,30ல் வீரபாண்டிய கட்ட பொம்மு நாடகம் நடக்கிறது. மே 1ல் இரவு 11.00 மணிக்கு பூப்பல்லக்கு, மே 2ல் குதிரை வாகனத்தில் அம்பாள் பவனி, பொங்கல் வைத்தல், அக்னி சட்டி, கும்பி, கோலாட்டம், கரகாட்டம், முளைப்பாரி காவடி நடக்கிறது.