உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞானானந்தா தபோவனத்தில் சித்ரா பவுர்ணமி விழா

ஞானானந்தா தபோவனத்தில் சித்ரா பவுர்ணமி விழா

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார்‚ ஞானானந்தா தபோவனத்தில், சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை  6:00 மணிக்கு, அதிஷ்டானத்தில் மகன்யாச ஏகாதச ருத்ரஜபம்‚ மூர்த்திகள் அபிஷேகம், 6:30 மணிக்கு, கணபதி ஹோமம், பாத பூஜை‚  அதிஷ்டானத்தில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு, மணி மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம்‚ அலங்காரம்,  அதிஷ்டானம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை, தபோவன நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி  மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !