எல்லை பிடாரி அம்மன் கோவிலில் தீமிதி விழா
ADDED :3504 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் எல்லை பிடாரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. விழாவையொட்டி, அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள பூசாரி முருகன் பூங்கரகத்துடன் முதலில் தீ மிதித்தார். அதைத் தொடர்ந்து ஏராளமான ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் காப்புகட்டி தீ மிதித்தனர். தொடர்ந்து மாலை அம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.