பொற்பாத விநாயகர் கோவிலில் பெருவிழா திருவிளக்கு பூஜை
ADDED :3665 days ago
சிதம்பரம்: மெய்க்காவல் தெரு பொற்பாத விநாயகருக்கு சித்திரை பெருவிழாவையொட்டி நடந்த திருவிளக்கு பூஜையில் 400 சுமங்கலி பெண்கள் பங்கேற்றனர். சிதம்பரம் மெய்க்காவல் தெரு பொற்பாத விநாயகர் கோவிலில் சித்திரை பெருவிழா 3 நாட்கள் நடந்தது. இதனையொட்டி விநாயகர் சுவாமிக்கு தினம் சிறப்பு அபிஷேக அலங்காரம், தீபாராதனை நடைபெற்று மாலை வீதி புறப்பாடு செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்தர். நிறைவு நாளன்று சுமங்கலி பெண்களின் திருவிளக்கு பூஜை விநாயகர் சன்னதியில் நடந்தது. இதனையொட்டி பொற்பாத விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. சுவாமி புறப்பாடு செய்து சன்னதியில் எழுந்தருளினார். சுமங்கலி பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி விநாயகர் அகவல் படித்து சிறப்பு பூஜை செய்தனர். இதில் 400 பெண்கள் பங்கேற்றனர்.