பிரத்தியங்கிரா காளி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா!
ADDED :3504 days ago
புதுச்சேரி: பிரத்தியங்கிரா காளி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் உள்ள பிரத்தியங்கிரா காளி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது.விழாவை முன்னிட்டு, காலை 6 மணிக்கு புனிதநீரை கலசங்களின் ஏந்தி கோவிலை வலம் வந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை நடந்தது. மாலை 6.30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில் பெண்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். 8 மணிக்கு மூலவர் அம்மன் பஞ்சமுகத்தில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாட்டை நடாதூர் ஜனார்த்தன சுவாமிகள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.