அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :3661 days ago
புதுச்சேரி: சின்ன சுப்பராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அங்காளபரமேஸ்வரி கோவிலில் காலை 7.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு கூட்டு பிரார்த்தனை, மூலவருக்கு சந்தன காப்பு தீபாராதனை நடந்தது. இரவு 9.30 மணிக்கு அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஜயக்குமார் மற்றும் நிர்வாகி கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.