உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளவனுார் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா!

வளவனுார் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா!

விழுப்புரம்: வளவனுார் குமாரபுரி ஸ்ரீ சலத்துவாழி முத்துமாரியம்மன் கோவிலில் தேர்  திருவிழா நடந்தது.  விழாவையொட்டி, கடந்த  13ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு சக்தி கரகம் வீதியுலாவும், 14ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது.  தொடர்ந்து, சிம்ம  வாகனம், வேப்பங்கிளை வாகனம், நாகவாகனம், அன்னவாகனம், யானை வகனம், ரிஷபவாகனம் வீதியுலா நடந்தது.  இதையடுத்து, நேற்று  காலை 9:00 மணிக்கு பிரம்மோற்சவ திருத்தேர் வீதியுலா நடந்தது. மாலை 4:00 மணிக்கு ஊரல் குட்டை திடலில், செடல் உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !