உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோடைத் திருநாள் உற்சவம் ஸ்ரீரங்கத்தில் கஜேந்திரமோட்சம்!

கோடைத் திருநாள் உற்சவம் ஸ்ரீரங்கத்தில் கஜேந்திரமோட்சம்!

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், கோடைத் திருநாள் உற்சவத்தையொட்டி, நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் கண்டருளும் நிகழ்ச்சி நடந்தது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், கடந்த, 12ம் தேதி கோடைத்திருநாள் உற்சவம் துவங்கியது. நம்பெருமாள், 16ம் தேதி வரை வெளிக்கோடைத் திருநாளும், 17 ம் தேதி முதல், 21ம் தேதி வரை உள்கோடை திருநாளும் கண்டருளினார். விழாவின் முக்கிய நிகழ்வான நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் கண்டருளும் நிகழ்ச்சி நேற்று அம்மாமண்டபத்தில் நடைபெற்றது. இதற்காக, மாலை 4 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அம்மா மண்டபம் வந்தடைந்தார். மாலை, 6.15 மணிக்கு கோவில் யானை ஆண்டாள் அம்மா மண்டபம் படித்துறைக்கு அழைத்து வரப்பட்டு, முனிவரின் சாபத்தால் முதலையாக தவித்த மன்னனுக்கு சாபவிமோச்சனம் வழங்கும் கஜேந்திரமோட்சம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்திர்கள் பங்கேற்று, நம்பெருமாளை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !