உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பழைய புதுாரில் உள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில், புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் விழா நடந்தது. புதிய கொடிமரம் நான்கு லட்ச ரூபாய் செலவில், 25 அடி உயரத்தில் பர்மா தேக்கு மரத்தில் செய்யப்பட்டுள்ளது. கொடிமரத்தில் செப்புதகடுகள் பதிக்கப்பட்டு, உச்சியில் பித்தளையில் கருடாழ்வார் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. கொடிமரத்தில் மணிகள் அமைக்கப்பட்டு, அது தொடர்ந்து ஒலிக்கும் வண்ணம் அரச வடிவிலான இலைத் தகடுகளும் நிறுவப்பட்டுள்ளன. கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் விழாவுக்கு கோவில் நிர்வாக அறங்காவலர்கள் கோவிந்தராஜூலு, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி உற்சவ கோலத்தில் இருந்த பூதேவி, ஸ்ரீதேவி சமேத ஆதிமூர்த்தி பெருமாள் மற்றும் கொடிமரத்துக்கு திருமஞ்சன பூஜைகள் நடந்தன. பாப்பநாயக்கன்பாளையம் ஜெகநாத பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் ஆராவமுதாச்சாரியர் கொடிமரத்துக்கு புனிதநீர் அபிஷேகம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !