உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி லிங்கேஸ்வரர் தெப்பத்தேர் உற்சவம் பக்தர்கள் பரவசம்!

அவிநாசி லிங்கேஸ்வரர் தெப்பத்தேர் உற்சவம் பக்தர்கள் பரவசம்!

அவிநாசி : அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் சித்திரை தேர்த்திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு தெப்பத்தேர் உற்சவம் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், சிறப்பு அலங்காரத்தில், அம்பாள் சந்திரசேகரருடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நாதஸ்வர கலைஞர்கள், மல்லாரி உள்ளிட்ட மழை வரும் ராகங்களை வாசித்தனர். வேத விக்ஞான மஹாபாடசாலை மாணவர்கள், வேத பாராயணம் செய்தனர். நான்கு புறங்களிலும் திரண்டிருந்த பக்தர்கள், மலர் தூவி, வழிபட்டனர். தேவர் திருமண மண்டப அறக்கட்டளை மற்றும் தேவர் சமூகத்தினர் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று நடராஜர் தரிசன காட்சி நடந்தது; இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !