உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரம் ஸ்தலசயனர் திருத்தேரில் வீதி உலா

மாமல்லபுரம் ஸ்தலசயனர் திருத்தேரில் வீதி உலா

மாமல்லபுரம் : மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள், நேற்று தேரில் வீதியுலா சென்றார். மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிவில், 16ம் தேதி சித்திரை பிரம்மோற்சவ விழா துவங்கி, தினமும், காலை, மாலையில், பல்வேறு உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. 20ம் தேதி, முக்கிய உற்சவமான கருடசேவை நடந்தது.மற்றொரு முக்கிய உற்சவமான திருத்தேர் வீதியுலா, நேற்று கோலாகலமாக நடந்தது. கோவிலில், நேற்று காலை வழக்கமான வழிபாட்டை தொடர்ந்து, ரத பிரதிஷ்டை ஹோமம் முடிந்து, ராஜ அலங்கார சுவாமி, தேவியருடன், அலங்கார தேரில் காலை, 7:15 மணிக்கு எழுந்தருளினார்.சுவாமிக்கு, பூதத்தாழ்வார் அளித்த ஆடை சாற்றி, வழிபாடு முடிந்து, வேதபாராயணம், மங்கல இசை முழங்க, 9:00 மணிக்கு, தேர் நிலையிலிருந்து புறப்பட்டது. பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என முழங்கினர்; வடம் பிடித்து, ராஜ வீதிகளில் தேரை இழுத்துச் சென்று, சுவாமியை வழிபட்டனர்; 11:15 மணிக்கு, தேர் நிலையை அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !