சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம்
ADDED :3504 days ago
உத்திரமேரூர் : உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. காலை, 7:00 மணிக்கு சுவாமி தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்பகுதியில் உள்ள அனந்த அய்யங்கர் தெரு, பெரிய நாரசாம்பேட்டை, திருமலையார் பிள்ளைத்தெரு, வீரபெருமாள் அய்யங்கர் தெரு மற்றும் பஜார் வீதி போன்ற முக்கிய தெருக்களில் வலம் வந்த சுவாமியை, பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.