பரமக்குடியில் அழகர் இன்று கோயிலுக்குள் பிரவேசனம்
ADDED :3652 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கள்ளழகர் திருக்கோலத்துடன் பெருமாள் கோயிலுக்குள் பிரவேசனமாகும் நிகழ்ச்சி நடக்கிறது. இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்., 17ல் காப்புக்கட்டுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக ஏப்., 22 அதிகாலை பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்கினார். ஏப்., 24ல் மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும், தசாவதார சேவையும் நடந்தது. இன்று காலை 7 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் ஈட்டி, கத்தி, வளரி ஏந்தி, கோடாரி கொண்டையிட்டு பூப்பல்லக்கில் வீதி வலம் வருகிறார். மாலை 5 மணிக்கு மேல் கோயிலுக்குள் பிரவேசனமாக உள்ளார். இதையடுத்து இரவு கண்ணாடி சேவை நடக்கிறது.