புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் சித்திரை திருவிழா
புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் சர்வாஸ்ரமம் மற்றும் செந்தமிழ் பற்றாளர்கள் சங்கமம் சார்பில் சித்திரை திருவிழா நடந்தது. கவிஞர் கதிர் வரவேற்றார். தமிழ் சங்க தலைவர் முத்து, முத்துரத்தினம், பாலசொக்கநாதன் தலைமை தாங்கினர். தொடர்ந்து பாலசுப்ரமணியன் தலைமையில் சித்திரை மகளே வருக என்னும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது. இதில் 35 கவிஞர்கள் கவிதை வாசித்தனர். கவிஞர் பைரவி கவிஞர்களை நெறிப்படுத்தினார். அதனை தொடர்ந்து நடந்த சிறப்பு சொற்பொழிவில் முன்னாள் ஓய்வு பெற்ற நீதிபதி சேதுமுருகபூபதி, ராஜரிஷி, சித்தானந்தாஜி, முனைவர் ராமு, ஹேமாபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விழாவில் முத்துரத்தினம், பூங்கோதை, வேலாயுதம், ஆண்டனி, ராஜ முருகையன், ராமு, ஜம்புலிங்கம் ஆகியோருக்கு சாதனை சிகரம் விருது வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை ராமலிங்கம், சேகர், பாலகதிரவன் ஆகியோர் செய்திருந்தனர். முருகன் நன்றி கூறினார்.