உடுமலை செல்லாண்டியம்மன் கோவில் விழா
ADDED :3584 days ago
உடுமலை: செல்லாண்டியம்மன் கோவில், பொங்கல் திருவிழாவில் இன்று, கொடிகம்பம் போடும் நிகழ்ச்சி நடக்கிறது. உடுமலை, சின்னபாப்பனுாத்தில் அமைந்துள்ளது, செல்லாண்டியம்மன் கோவில். கோவில் பொங்கல் திருவிழா, ஏப்., 19ல் நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. இன்று காலை, 8:00 மணிக்கு, கொடி கம்பம் போடுதலும், மாலை, 6:00 மணிக்கு, மகாகணபதி வழிபாடும், இரவு, 8:00 மணிக்கு, சக்தி கும்பம் ஸ்தாபனம், சக்தி அழைத்தல், சக்தி கும்பம் கோவிலுக்கு வருதல் உள்ளிட்டவை நடக்கின்றன. நாளை காலை, 6:00 மணிக்கு, மாவிளக்கு, பொங்கல் முளைப்பாரி எடுத்தலும், மதியம், 2:00 மணிக்கு, விநாயகர் கோவிலிலிருந்து பூவோடு எடுத்து வருதலும், இரவு, 7:30 மணிக்கு, சக்தி கும்பம் கங்கையில் விடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏப்., 28 ம் தேதி, காலை, 11:30 மணிக்கு மகா அபிேஷகத்துடன் திருவிழா நிறைவடைகிறது.