புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை
ADDED :3651 days ago
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில், ஏக தின லட்சார்ச்சனை விழா நடந்தது. புவனகிரி ராகவேந்திரர் கோவில் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் ஏக தின லட்சார்ச்சனை விழா துவங்கியது. வேதவிற்பன்னர் ரகோத்தம ஆச்சார் தலைமையில், மிருத்திகா பிருந்தாவனத்திற்கு பால் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.முன்னதாக, கோவில் வளாகத்தில் ராகவேந்திரர் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வேத விற்பன்னர்களைக் கொண்டு, வேத பாராயணமும், மலர்களைக் கொண்டு ஏக தின லட்சார்ச்சனையும் செய்யப்பட்டது. ரமேஷ் ஆச்சார், ராகேவேந்திரர் ஆச்சார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.