திருவள்ளூர் விடையாற்றி உற்சவம்: புஷ்ப பல்லக்கில் வீரராகவர்!
ADDED :3582 days ago
திருவள்ளூர் : திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், விடையாற்றி உற்சவ நிறைவு நாளை முன்னிட்டு, உற்சவர் புஷ்ப பல்லக்கில் வீதியுலா வந்தார்.திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், விடையாற்றி திருவிழா, கடந்த 23ம் தேதி துவங்கியது. தினசரி, திருமஞ்சனம் நடந்தது. விழாவின் நிறைவு நாளான, நேற்று முன்தினம், இரவு 8:30 மணியளவில், உற்சவர் புஷ்ப பல்லக்கு எழுந்தருளி, நான்கு வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.