உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கிள்ளை: கிள்ளை அடுத்த பொன்னந்திட்டில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 23ம் தேதி காலை 8:30 மணிக்கு கணபதிஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் பூர்வாங்க பூஜை துவங்கியது.  தொடர்ந்து 24ம் தேதி காலை 9:00 மணிக்கு இரண்டாம் காலயாகசாலை பூஜையும், நேற்று (25ம் தேதி) காலை நான்காம் கால யாகசாலை பூஜையும் தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு கலச புறப்பாடு துவங்கி, 9:45  மணிக்கு விமான கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !