வன்னிய பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா துவக்கம்
புதுச்சேரி: முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா, நேற்று துவங்கியது. காலை 7:00 மணிக்கு அலர்மேல்மங்கை சமேத ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதைத்தொடர்ந்து, கொடியேற்றம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு இந்திர விமானத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. இன்று (27 ம் தேதி) புருஷசுத்த ஹோமம், சூரியபிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், 28 ம் தேதி ஹயக்ரீவர் ஹோமம், சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா, 29ம் தேதி சுக்த, லஷ்மி ஹோமம், இரவு கருடசேவையும், 2ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 4ம் தேதி தேர் திருவிழாவும், மாலையில் தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் சிறப்பு அதிகாரி சீனுவாசன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.