செம்முனீஸ்வரர் கோவிலில் 29ம் தேதி முதல் வன பூஜை
ADDED :3658 days ago
பவானி: பவானி அருகே, செம்முனீஸ்வரர் கோவிலில், 29ம் தேதி வன பூஜை நடக்கிறது. பவானி தாலுகா பட்லூரை அடுத்த பூசாரியூரில் உள்ளது செம்முனீஸ்வரர் கோவில். ஆண்டுதோறும் சித்திரை திருவிழா இக்கோவிலில் சிறப்பாக நடக்கிறது. கடந்த, 15ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. கடந்த, 25ம் தேதி ஆயக்கால் போடும் நிகழ்ச்சி நடந்தது. வரும், 28ம் தேதி தீர்த்த குடம் எடுத்து வருதல், 29ம் தேதி முதல் வன பூஜை நடக்கிறது. மே 13, 14, 15 ஆகிய நாட்களில் மறுபூஜை நடக்கிறது. இந்நாட்களில் மாட்டு சந்தையும் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ராமமூர்த்தி, பூசாரிகள் லட்சும மூர்த்தி, ஈஸ்வரன் ஆகியோர் செய்கின்றனர்.