வனபத்ர காளியம்மன் கோவிலில் மறுபூஜை
ADDED :3659 days ago
ஈரோடு: ஈரோடு மண்டபம் வீதி உப்புகிணறு சந்து பகுதி, வன பத்ரகாளியம்மன் கோவில், குண்டம் திருவிழாவில், நேற்று காலை தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கங்கணம் கட்டி விரதம் இருந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவையொட்டி, சிறப்பு அலங்கார்த்தில் அம்மன் அருள் பாலித்தார். இதைதொடர்ந்து மாலையில் அம்மன் புறப்பாடு நிகழ்ச்சியும், இரவில் வாய்க்காலில் கும்பம் விடும் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று மறுபூஜை நடக்கிறது.