உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்துார் பூமாயி அம்மன் பூச்சொரிதல் விழா

திருப்புத்துார் பூமாயி அம்மன் பூச்சொரிதல் விழா

திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் 82ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடந்தது. நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். நகரின் பல பகுதிகளிலிருந்தும் பெண்கள் ஊர்வலமாக பூத்தட்டுக்களுடன் வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்தினர். சர்வ அலங்காரத்தில் சப்த மாதாக்களும், நடு நாயகமாக பூமாயி அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நகரின் முக்கிய பகுதிகளில் மோர்பந்தல், பாடல், இசைக்கச்சேரியை பல்வேறு அமைப்பினர் செய்திருந்தனர். நாளை அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, பூச்சொரிதல் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !