உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடகம்பூண்டி கிராமத்தில் மகா கும்பாபிஷேக விழா

கடகம்பூண்டி கிராமத்தில் மகா கும்பாபிஷேக விழா

செஞ்சி: செஞ்சி தாலுகா கடகம்பூண்டி கிராமத்தில் விநாயகர், அய்யனார், பாலமுருகன், வீரனார், துர்கையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஜீர்ணோதாரண மகா கும்பாபிஷேகம் நடந்தது.  இதை முன்னிட்டு 24ம் தேதி காலை 10 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, கணபதி ஹோமம், வாஸ்த்து சாந்தியும், மாலை 6 மணிக்கு பிரவேச பலி, கும்ப அலங்காரம், முதல் கால யாகசாலை பூஜையும், இரவு அஷ்டபந்தனம் சாற்றுதலும் நடந்தன. மறுநாள் காலை 8:30 மணிக்கு மகா பூர்ணாஹுதியும் நடந்தது. தொடர்ந்து 9:30 மணிக்கு விநாயகர்  கோவில் மற்றும் அனைத்து கோவில் விமானங்களுக்கும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.  காலை 10:00 மணிக்கு வீரனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !