விக்கிரவாண்டி கோவில் திருப்பணிக்கு பூமி பூஜை
ADDED :3588 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி முத்து மாரியம்மன் கோவில் திருப்பணி மற்றும் ராஜ கோபுரம் கட்டுவதற்கான துவக்க விழா நடந்தது. இதையொட்டி, வினாயகர், முருகன், முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் ராஜ கோபுர பணிக்கான பூமி பூஜை செய்து, திருப்பணியை துவக்கினர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு பலராமன், ரவி, காந்தி,சுப்புராயலு, ஆனந்தன், கலியன், ராமலிங்கம், சந்தானம், அரிகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்