உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கோவில் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள்!

உடுமலை கோவில் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள்!

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா முன்னிட்டு, அசம்பாவிதங்களை தவிர்க்கவும், பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், கோவில் வளாகத்தில், 10 கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டது.  மாரியம்மன் கோவில் வளாகத்தில், நுழைவாயில் உள்ளிட்ட, 5 இடங்களில் நிரந்தரமாக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  இந்நிலையில், தேர்த்திருவிழா முன்னிட்டு, அதிகளவிலான மக்கள் வருகை தருவதால், அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேலும், 5 கேமராக்கள் கோவிலை சுற்றிலும் பொருத்தப்பட்டிருந்தன.  இந்த கேமராக்கள் செயல் அலுவலர் அறையில் கண்காணிக்கப்பட்டன. தேரோட்டத்தின் போது, கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில், பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகள் ஒலிபெருக்கியில், அறிவிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !