பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி விழா!
ADDED :3652 days ago
கடலுார்: பிள்ளையார்மேடு பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது. கடலுார் முதுநகர் அடுத்த பிள்ளையார்மேடு பச்சை வாழியம்மன் கோவில் தீமிதி விழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, வீதியுலா நடந்தது. கடந்த 29ம் தேதி சிறப்பு மகா அபிஷேகம், சுப்பிரமணியர் வள்ளி தெய்வாணை திருக்கல்யாணம் நடந்தது. மாலை தீமிதி உற்சவம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை பூசாரி முருகேசன் மற்றும் கிராம வாசிகள் செய்திருந்தனர்.