வெளிநாடுகளிலும் திருப்பதி ஏழுமலையான் உற்சவம்
ADDED :3649 days ago
திருப்பதி: வெளிநாடுகளில், ஏழுமலையான் வைபவ உற்சவத்தை நடத்த, தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது.திருமலையில், ஏழுமலையானுக்கு நடக்கும் சேவைகளை, திருமலைக்கு வந்து நேரில் காணமுடியாத பக்தர்களுக்காக, திருமலை தேவஸ்தானம், பிற மாநிலங்களிலும் நடத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து, வைபவ உற்சவம் என்ற பெயரில், சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, வசந்த உற்சவம் உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகளையும், நாட்டின் பல இடங்களில் நடத்தி வருகிறது. சீனிவாச கல்யாண உற்சவம், உலகின் பல நாடுகளில் நடத்தப்பட்டது. இதே போல், பிற சேவைகள், உற்சவங்களையும் வெளிநாடுகளில், இரண்டு நாட்கள் விழாவாக நடத்த, தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக, அர்ச்சகர்கள், ஊழியர்கள் என, 30 பேர் கொண்ட குழு, வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகி வருகிறது.