உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேண்டுதல் நிறைவேறாததற்கு காரணம் என்ன?

வேண்டுதல் நிறைவேறாததற்கு காரணம் என்ன?

சிலர், “ஆண்டவரிடம் நான் என்னுடைய எல்லா கஷ்டங்களையும் சொல்லிவிட்டேன். அவரிடம் பலமுறை ஜெபித்தேன். ஆனாலும், நான் கேட்டது கிடைக்கவில்லை. நினைத்தது நடக்கவில்லை. அவர் என்னைக் கவனிக்கவில்லை. ஆனால், இதோ! என் அருகில் இருப்பவரின் ஜெபம் நிறைவேறி விட்டது. அவர் கடந்த மாதம் குறிப்பிட்ட ஒரு வீட்டை வாங்கத் திட்டமிட்டார். அந்த வீடு தனக்கே அமைய வேண்டுமென ஆண்டவரிடம் ஜெபம் செய்தார். நினைத்தபடி அவருக்கு அந்த வீடு அமைந்து விட்டது. ஆண்டவரிடம் ஏன் இந்த பாரபட்சம்?” என நினைக்கிறார்கள். ஆண்டவரிடம் ஜெபம் எடுபடாமல் போவதற்கு காரணங்கள் உண்டு.முதலில் பயம் அல்லது சந்தேகம். பைபிளில் “நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது. நான் அஞ்சினது எனக்கு வந்தது,” என யோபு என்பவர் கூறியதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆண்டவரிடம் ஒரு கோரிக்கையை வைக்கும்போது, முதலில் அவரை நாம் நம்ப வேண்டும். அவர் மீது சந்தேகமோ, பயமோ கொள்ளக்கூடாது. ஆண்டவரால் துன்பமே அருளப்பட்டாலும் கூட, அதுவும் நன்மைக்கே என ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வர வேண்டும். ஆண்டவரிடம் ஒன்றைக் கேட்டு ஜெபிக்க நமக்கு தகுதியும் வேண்டும். பாவமன்னிப்பு கேட்டபிறகு, மீண்டும் வேறு பாவங்களைச் செய்பவனின் கோரிக்கையை ஆண்டவர் ஏற்கவே மாட்டார். ஒழுக்கமின்மை, கெட்ட வழக்கங்கள் ஆகியவையும் தேவனுக்கு எற்புடையதல்ல. இப்படிப்பட்டவர்களின் கோரிக்கையை ஆண்டவர் ஏற்பதில்லை. மனதில் நல்ல நினைவு இருப்பவர்களின் கோரிக்கை மட்டுமே ஆண்டவரின் சன்னிதான கதவைத் தட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !