உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எருமப்பட்டி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

எருமப்பட்டி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. எருமப்பட்டி அடுத்த, பழையபாளையம் பஞ்., போடிநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத தேர் திருவிழா நடக்கிறது. கடந்த, ஏப்ரல், 10ம் தேதி, அம்மனுக்கு சக்தி அழைத்து காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து, நாள்தோறும், மாரியம்மனுக்கு அபிஷேகமும், ஆராதனைகளும் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பூச்சொரிதல் நிகழ்ச்சியும், மாவிளக்கு பூஜையும் நடந்தது. நேற்று மாலை மாரியம்மன் கோவில் முன்பாக பக்தர்கள் பூக்குழி இறங்கினர். நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் நகர்வலம் வந்தார். இன்று கிடா வெட்டு, மாலை கம்பம் குடிவிடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !