பார்வதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3548 days ago
மூணாறு: பழைய மூணாறில் மூலக்கடை பகுதியில் உள்ள பார்வதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று விக்னேஷ்வரா பூஜையுடன் துவங்கியது. பின்னர் கும்ப கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பார்வதியம்மன்,விநாயகர், நவகிரகம், கருப்பசாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள், பூஜைகள், நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மூணாறு இந்து தேவஸ்தானம் நிர்வாகத்தினர் செய்தனர்.