உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் மாரியம்மன் கோவில் விழா: மே 8ம் தேதி கம்பம் நடுதல்

கரூர் மாரியம்மன் கோவில் விழா: மே 8ம் தேதி கம்பம் நடுதல்

கரூர்: கரூர், மாரியம்மன் கோவில் திருவிழா, வரும், 8ம் தேதி முதல் ஜூன், 5ம் தேதி வரை நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு, 8ம் தேதி கம்பம் நடுதல், 13ம் தேதி பூரிசொரிதல், 15ம் தேதி காப்பு கட்டுதல், ரிஷப வாகன ஊர்வலம், 16ம் தேதி பல்லக்கு, புலி வாகனம், 17ம் தேதி பல்லக்கு, பூதவாகனம், 18ம் தேதி சிம்மவாகனம், 19ம் தேதி பல்லக்கு, அன்னவாகனம் நடக்கிறது. தொடர்ந்து, 20ம் தேதி பல்லக்கு, சேஷ வாகனம், 21ம் தேதி யானை வாகனம், 22ம் தேதி குதிரைவாகனம், எதிர் காப்பு கட்டுதல், 23ம் தேதி திருத்தேர் இழுத்தல், 24ம் தேதி கெஜலட்சுமி வாகனம், 25ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல், 26ம் தேதி புஷ்ப விமானம், 27ம் தேதி கருட வாகனம், 28ம் தேதி மயில் வாகனம் ஊர்வலம் நடக்கிறது. அதேபோல், 29ம் தேதி கிளி வாகனம், 30ம் தேதி வேப்பமர வாகனம், 31ம் தேதி பின்னமர வாகனம், ஜூன், 1ம் தேதி புஷ்ப அலங்காரம், 2ம் தேதி பஞ்ச பிரகாரம், 3ம் தேதி புஷ்ப பல்லக்கு, மாரியம்மன் பல்லக்கு, மவடி ராமசாமி பல்லக்கு, 4ம் தேதி இரவு, 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !