கீழக்கரை பத்திரகாளியம்மன் கோயிலில் சித்திரை விழா கோலாகலம்
ADDED :3530 days ago
கீழக்கரை: கீழக்கரை கிழக்கு நாடார் தெரு பத்திரகாளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கோலகலமாக நடந்தது. ஏப்.,26ல் காப்பு கட்டும் வைபவம் நடந்தது. நாள்தோறும் அம்மனுக்கு சந்தண காப்பு அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள், அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று காலை திருவிளக்கு பூஜை, மாலை பொங்கல் விழா நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்க அன்னதானம் வழங்கபட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர், கிழக்கு நாடார் உறவின்முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.