பகவதி அம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED :3523 days ago
எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. சேந்தமங்கலம் தாலுகா, எருமப்பட்டி அடுத்த பொட்டிரெட்டிப்பட்டி பகவதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேர் திருவிழா நடக்கிறது. இந்தாண்டு விழா கடந்த, ஏப்., 27ம் தேதி, மாரியம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும், பகவதி அம்மனுக்கு அபிஷேகமும், ஆராதனைகளும் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை மாவிளக்கு பூஜையும், சுவாமி தேரில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று பொங்கல் வைத்து, கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், நாளை (6ம் தேதி) பகவதி அம்மன் ஊஞ்சலில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை மறுநாள் (7ம் தேதி) அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் நகர்வலம் வருகிறார். மாலை மஞ்சள் நீராட்டு விழாவுடன், கம்பம் குடிவிடும் நிகழ்ச்சி நடக்கிறது.