கோத்தகிரி பகுதியில் மழை வேண்டி சிறப்பு பூஜை
ADDED :3523 days ago
கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் நடப்பாண்டு பருவ மழைப் பொய்த்துவிட்டது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. தவிர, தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல், மகசூல் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால், விவசாயிகள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். இதனால், கிராமப்புற கோவில்களில், வருண பகவானுக்கு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.