உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செலம்பூர் அம்மன் கோவில் குண்டம் திருவிழா

செலம்பூர் அம்மன் கோவில் குண்டம் திருவிழா

அந்தியூர்: அந்தியூரை அடுத்துள்ள, எண்ணமங்கலம் அருகே உள்ள கோவிலூர் செலம்பூர் அம்மன் கோவில் விழா கடந்த, 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நேற்று நடந்தது. ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கணக்காக பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அந்தியூர் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அம்மனை வழிபட்டு சென்றனர். 200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவில் பர்கூர் மலை வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு சந்தன கடத்தல் வீரப்பன் இக்கோவிலில் வந்து வழிபட்டு சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !