சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில் விழா
ADDED :3459 days ago
கரூர்: கரூர் அருகே, நெரூரில், சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில் வரும், 11ம் தேதி, 102வது ஆராதனை விழா துவங்குகிறது. அதை தொடர்ந்து நாள்தோறும், பாகவத கோஷ்டியுடன் உஞ்சவிருத்தி, அபிஷேகம், லட்சார்ச்சனை, வேதபராயணம் ஆகியவை நடக்கிறது. வரும், 16ம் தேதி காலை சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின், அன்னதானம் சாப்பிட்ட இலையில், பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்யும் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. ஏற்பாடுகளை, நெரூர் சதாசிவ பிரமேந்திர சபா, நெரூர் சத்குரு சதாசிவ பிரமேந்திரர் சேவா டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.