ஊட்டி முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை
ADDED :3448 days ago
ஊட்டி: ஊட்டி அருகே எம்.பாலாடா கீழ் அப்புக்கோடு பகுதியில் கிருத்திகை பூஜை நடந்தது. சித்தி செல்வ விநாயகர், ஆனந்தமலை முருகன், ஏழு ஹெத்தையம்மன், நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பக்தர்களின் இன்னிசை, பஜனை, ஆன்மிக சொற்பொழிவு, கலாச்சார நடனம் நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.